ஐபிஎல் 2026 தொடரில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்து வருகிறது. நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு ஒரு பக்கம் பேட்டிங் காரணமாக இருந்தாலும், மறுபக்கம் குருணால் பாண்டியாவின் விசித்திரமான பந்துவீச்சுதான் இப்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக். பொதுவாகச் சுழற்பந்து வீச்சாளர்கள் கூக்ளி, கேரம் பால் வீசுவதைப் பார்த்திருப்போம். ஆனால், குருணால் பாண்டியா ஒரு படி மேலே போய் 128 கி.மீ வேகத்தில் ஒரு பவுன்சர் பந்தை வீசி அனைவரையும் அதிர வைத்துள்ளார்.
சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தின் 6-வது ஓவரில் சர்பராஸ் கானை அவுட் செய்த குருணால், அதே ஓவரில் ஒரு வேகப்பந்து வீச்சாளரைப் போல பவுன்சர் வீசி பேட்டரை நிலைதடுமாறச் செய்தார்.
ஒரு ஸ்பின்னர் இவ்வளவு வேகத்தில் பவுன்சர் வீசுவது கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டதா என்ற விவாதங்கள் எழுந்தாலும், கிரிக்கெட் வல்லுநர்கள் இது விதிமுறைக்கு உட்பட்டதுதான் என்று தெரிவித்துள்ளனர்.
ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், “விக்கெட் தேவைப்படும் நேரத்தில் நான் எப்போதும் குருணால் பாண்டியாவைத்தான் நம்புவேன்” என்று பாராட்டியுள்ளார்.
கடந்த 2025 சீசனில் ஆர்சிபி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த குருணால், இந்த ஆண்டும் தனது புதுமையான பந்துவீச்சால் எதிரணிகளை மிரட்டி வருகிறார்.
