அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்  ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

நெஹ்ரா உடனே அவரைத் தூக்கி அணைத்துத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். மைதானத்தில் எதிரணியாக இருந்தாலும், பெரியவர்களுக்கு வைபவ் கொடுத்த இந்த மரியாதையைப் பார்த்த ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு இதே குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்த சூர்யவன்ஷி, இந்த ஆண்டும் மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளார்.
<a href=”http://

“>

சமீபத்தில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து அனைவரையும் மிரள வைத்தார். வைபவ் மற்றும் நெஹ்ரா சந்திப்பு தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.