பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தான் விடுதலை பெற்றால், இந்தியாவிற்கு மூன்று மிகப்பெரிய பரிசுகளை வழங்கத் தயாராக இருப்பதாக அந்த நாட்டுப் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். பலுசிஸ்தான் சமூக ஆர்வலர் மீர்யார் பலூச் இதுகுறித்து கூறுகையில், தங்கள் நாடு சுதந்திரம் அடைந்தால் இந்தியாவின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தாராளமாக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வழங்கத் தயார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு இந்தியாவை நேரடியாக இணைக்கும் பிரத்யேகப் போக்குவரத்துப் பாதையையும் வழங்க அவர்கள் முன்வந்துள்ளனர். இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பல மடங்கு உயர்த்தும் ஒரு பொன்னான வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

பொருளாதார நன்மைகள் மட்டுமின்றி, கலாச்சார மற்றும் பாதுகாப்பு ரீதியாகவும் இந்தியாவிற்குப் பெரும் பலம் கிடைக்கும். 51 சக்தி பீடங்களில் ஒன்றான ஹின்க்லாஜ் மாதா கோவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ளதால், சுதந்திரத்திற்குப் பின் இந்தியர்கள் தடையின்றி அங்குச் செல்ல முடியும். மிக முக்கியமாக, பலுசிஸ்தான் பிரிந்தால் அரபிக்கடலில் பாகிஸ்தானின் ஆதிக்கம் குறையும் மற்றும் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீனாவின் ‘சிபெக்’  திட்டம் முடக்கப்படும்.

“>

 

இந்தியாவின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் வலுசேர்க்கும் வகையில், பலுசிஸ்தான் ஒரு மிகச்சிறந்த உத்தேச கூட்டாளியாக இருக்கும் என்பதை இந்த அறிவிப்புகள் உணர்த்துகின்றன.