தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது ‘ஜன நாயகன்’ திரைப்படம் கடந்த இரண்டு மாதங்களாக முடக்கப்பட்டுள்ள விவகாரத்தில் முதன்முறையாகத் தனது மௌனத்தைக் கலைத்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், கரூர் சம்பவம் ஒரு சூழ்ச்சி என்றால், தனது ‘ஜன நாயகன்’ படத்தை வெளியிடாமல் தடுப்பதும் ஒரு கூட்டுச் சூழ்ச்சி என்று ஆக்ரோஷமாகத் தெரிவித்தார்.
திமுக மற்றும் பாஜகவை மறைமுகமாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் நேரத்தில் இந்தப் படம் மிகப்பெரிய அரசியல் ஆயுதமாக மாறிவிடுமோ என்ற அச்சமே இந்தத் தடைக்குக் காரணம் என்று கூறினார். “எனக்கு ஏற்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்கவே இங்கு வந்துள்ளேன்” என்று உருக்கமாகப் பேசிய விஜய், எத்தகைய முட்டுக்கட்டைகள் வந்தாலும் தனது அரசியல் பயணம் தொடரும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
