தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டியால் சூடுபிடித்துள்ள நிலையில், பிரபல இயக்குனர் சேரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. சீமானும் அவரது தம்பி, தங்கைகளும் இந்த முறை கண்டிப்பாகச் சட்டமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
ஊழலை ஒழிக்கவும், மக்களின் பணம் சூறையாடப்படுவதைத் தடுக்கவும், சமூகத் தீமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் சீமானின் அதிரடியான பேச்சுக்கள் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று சேரன் குறிப்பிட்டுள்ளார்.
<a href=”http://
எனக்கு இவரும் இவரின் தம்பி தங்கைகளும் சட்டசபை செல்ல வேண்டும் என தோன்றுகிறது… ஏனெனில் இவர்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வது, சமூக தீங்குகளை ஒழிப்பது.. நல் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுப்பது.. ஊழல் குற்றங்கள் நடக்காமல் மக்களின் பணம் சூறையாடப்படாமல் தடுத்து அதை நல்ல… pic.twitter.com/jKZPdcK8rw
— Cheran Pandiyan (@CheranDirector) March 31, 2026
“>
கடந்த கால அரசுகள் இலவசங்களை ஆசைகாட்டி மக்களை ஏமாற்றி வருவதாகவும், தேர்தலில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துவிட்டு அதை நூறு மடங்காக எடுப்பதிலேயே குறிக்கோளாக இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். வாரிசு அரசியலை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட்டு, மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை மேய்ப்பாளர்களாக உருவாக்க வேண்டும் என்று அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
போதைப்பொருள் புழக்கம் மற்றும் வன்முறைகளைத் தட்டிக்கேட்க அழுத்தமான குரல் தேவை என்றும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் இயக்குனர் சேரன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
