முன்னாள் நட்சத்திர டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், இன்று மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ மற்றும் சுகந்தா மஜும்தார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த அவர், தற்போது அந்தப் பிம்பத்தில் இருந்து விலகி பாஜகவில் தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

​மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், லியாண்டர் பயஸின் இந்த வரவு பாஜகவுக்கு பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது. வரும் தேர்தலில் அவர் மேற்கு வங்கத்தில் ஒரு முக்கிய தொகுதியில் வேட்பாளராகக் களம் இறங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விளையாட்டுத் துறையில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த இவர், தற்போது அரசியல் களத்திலும் தனது முத்திரையைப் பதிக்கத் தயாராகிவிட்டார்.