நடிகர் விஜய் தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபோது, தமிழகத்தில் போட்டி திமுக-வுக்கும் தவெக-வுக்கும் இடையேதான் என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, விஜய் அரசியல் விவரம் தெரியாமல் ஒரு சிறுபிள்ளையைப் போலப் பேசி வருவதாகச் சாடியுள்ளார்.
சினிமாவில் வேண்டுமானால் அவர் ஆக்ஷன் ஹீரோவாக இருக்கலாம், ஆனால் அரசியலில் அவருடைய நடிப்பு எடுபடாது என்றும், அரசியல் ஆர்வலர்கள் அவரது பேச்சை ஒரு காமெடியாகவே பார்க்கிறார்கள் என்றும் அரசியலில் விஜயை ஒரு ஜோக்கராக பொதுமக்கள் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
தன் மேல் நம்பிக்கை இல்லாமல் தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என குறிப்பிட்ட ராஜேந்திரபாலாஜி, தமிழக அரசியலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையேதான் உண்மையான போட்டி நிலவுகிறது என்று கூறினார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்பார் என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்தார்.
