உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பிரியாணியில் கோழித் தொடை இறைச்சித் துண்டுகள் வழங்கப்படவில்லை என்ற காரணத்திற்காக விருந்தினர்களிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறியுள்ளது. திருமண வைபவத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து உபசரிப்பில் பிரியாணி பரிமாறப்பட்டபோது தங்களுக்குப் பிடித்தமான இறைச்சித் துண்டுகள் கிடைக்கவில்லை எனச் சில விருந்தினர்கள் உணவு பரிமாறுபவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
UP के अमरोहा में ए लोग बिरयानी मै बोटी के लिए लड़ रहे, बताइए .. pic.twitter.com/i3EEGCiiT3
— Ankit Rawal (@ankitrawal5454) March 29, 2026
மகிழ்ச்சியாகத் தொடங்கிய இந்தத் திருமண விருந்துச் சிறு பிணக்கினால் திடீரென வன்முறையாக உருவெடுத்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த மோதலின் போது ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் ஒருவரையொருவர் அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் பாத்திரங்களால் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர். இதனால் திருமண மண்டபமே போர்க்களமாக மாறியதுடன் உணவுப் பொருட்கள் அனைத்தும் தரைமயமாகின.
இந்த வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் மோதல் தொடர்பான காட்சிகள் அங்கிருந்தவர்களால் படம்பிடிக்கப்பட்டு தற்பொழுது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. உணவிற்காகத் திருமண வீட்டை ரணகளமாக்கிய இந்தச் சம்பவம் குறித்துப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
