பீகார் மாநிலம் மோதிஹாரியில் காதலுக்காக 22 வயது இளம்பெண் ஷில்பி குமாரி என்பவர் செய்த கொடூரக் கொலைகள் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளது. தனது காதலன் நிதீஷை திருமணம் செய்ய தடையாக இருந்த அவனது தாத்தாவை உயிருடன் எரித்துக் கொன்ற ஷில்பி, அதற்குப் பிறகு தனக்கு இடையூறாக இருந்த 5 வயது சிறுமி அன்ஷிகாவின் கழுத்தை அறுத்து மிகக் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

​இந்த கொலைகளைச் செய்துவிட்டு எவ்வித பயமும் இன்றி கோவிலுக்குச் சென்று பூஜை செய்த ஷில்பியை போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில், காதலனின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொன்றுவிட்டு ஒரு ‘மகா யாகம்’ நடத்தி அவனைத் திருமணம் செய்யத் திட்டமிட்டதாக அவர் கூலாகக் கூறியுள்ளார். மேலும், இதுவரை தான் 18 குற்றங்களைச் செய்துள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டது போலீஸாரையே மிரள வைத்துள்ளது. காதலில் இவ்வளவு கொடூரமான ஒரு மூளையை இதுவரை பார்த்ததில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.