பொதுவாக எலிப்பொறியில் ஒரு எலி சிக்கிக்கொண்டால், அதிலிருந்து தப்பிக்க அங்கும் இங்கும் ஓடிப் பெரும் பதற்றத்தையே காட்டும். ஆனால், இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு குட்டி எலிப்பொறிக்குள் சிக்கியிருந்தும் துளியும் பயமில்லாமல் மிகவும் நிதானமாக மொபைலில் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறது.
அந்த எலிக்கு முன்னால் ஒரு மொபைல் போனை வைத்து, அதில் ‘ஓ மை பிரண்ட் கணேஷா’ (Oh My Friend Ganesha) பாடலை ஓடவிட்டுள்ளனர். அந்தப் பாடலை அப்படியே மெய்மறந்து, ஒரு ‘லாடு சாமி’ போல அமர்ந்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த எலியின் செய்கை நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
“எலிக்கு இவ்வளவு தைரியமா?” என்றும், “விநாயகரின் வாகனமான எலி, அவரோட பாட்டையே பார்க்குதே!” என்றும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வேடிக்கையான வீடியோ இப்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி பலரையும் சிரிக்க வைத்து வருகிறது.
