தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 234 தொகுதி வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தும் பிரம்மாண்ட கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் அனல் பறக்கப் பேசியுள்ளார். வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அன்று வெளியாகும் தேர்தல் முடிவுகள் ஒரு சாதாரண செய்தியாக இருக்கக் கூடாது, அது ஒரு “உலக சாதனையாக” இருக்க வேண்டும் என அவர் முழங்கியுள்ளார்.
“தமிழ்நாட்டோட 234 தொகுதிகள்லயும் தவெக வேட்பாளர்கள்தான் எம்.எல்.ஏ ஆனாங்கங்கிற செய்தி, உலகமே வியக்குற சாதனையா மாறணும்!” என விஜய் பேசியது தொண்டர்களிடையே மின்னல் வேக உற்சாகத்தைப் பாய்ச்சியுள்ளது.விஜய்யின் இந்த அதிரடிப் பேச்சைக் கேட்ட ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள், “தளபதி சொல்லிட்டாரு… இனி களத்துல நம்ம ஆட்டம் வேற லெவல்ல இருக்கும்!” எனச் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்குகளைப் பறக்கவிட்டு வருகின்றனர்.
மற்ற அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் பிஸியாக இருக்கும் வேளையில், 234 தொகுதிகளிலும் தனித்து நின்று இமாலய வெற்றி பெறுவதே தனது இலக்கு என்பதை விஜய் இந்த உரையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “234-க்கு 234-ஆ? தளபதியோட இந்தத் தன்னம்பிக்கை வேற லெவல் பாஸ்!” என வியந்து கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர். மே 4-ஆம் தேதி விஜய் சொன்ன அந்த ‘உலக சாதனை’ நிஜமாகுமா என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது.
