அதிமுக-வில் திருப்பத்தூர் தொகுதி கிடைக்காத அதிருப்தியில் இருந்த திருப்பதி, நேற்று அதிரடியாகத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவர் இணைந்த அடுத்த 24 மணிநேரத்திற்குள்ளேயே, அவரை அந்தத் தொகுதியின் தவெக வேட்பாளராக விஜய் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “என்னப்பா இது… வந்த வேகத்துலேயே அண்ணனுக்கு சீட் கிடைச்சிருச்சு!” எனத் தொண்டர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.

​அதிமுக-வின் முக்கிய நிர்வாகியாக இருந்தவரை வளைத்துப்போட்டு, உடனடியாகக் களமிறக்கியுள்ள விஜய்யின் இந்த ‘மாஸ்டர் பிளான்’ தொகுதிக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “அதிமுக-வோட பலத்தையே தவெக வேட்பாளரா மாத்திட்டாரு தளபதி!” எனச் சமூக வலைதளங்களில் கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர். திருப்பதியின் இந்த மின்னல் வேக ‘என்ட்ரி’, திருப்பத்தூர் தேர்தல் களத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.