மகாராஷ்டிரா மாநிலத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த ஜெயந்த் பல்லாவர் என்பவர், கடந்த 2023-ம் ஆண்டு பணியில் இருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், அவர் மாரடைப்பால் இறக்கவில்லை, அவரது சொந்த மகளே விஷம் கொடுத்துக் கொலை செய்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
ஜெயந்தின் மகள் ஆர்யா, ஆஷிஷ் என்பவரைக் காதலித்ததற்குத் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த ஆர்யா தனது தந்தைக்கு மில்க்ஷேக்கில் விஷம் கலந்து கொடுத்துக் கொன்றுள்ளார்.
தந்தை இறந்த பிறகு, ஆர்யா கருணைஅடிப்படையில் காவல்துறை வேலையில் சேர்ந்து பயிற்சியில் இருந்துள்ளார். இதற்கிடையில் காதலன் ஆஷிஷுடன் ஏற்பட்ட மோதலால், ஆத்திரமடைந்த ஆஷிஷ் இந்தக் கொலை குறித்த ஆதாரங்களைக் காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஆர்யா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது அவர் பணிநீக்கம் செய்யப்பட்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
