உத்தரப்பிரதேச மாநிலம் ஓரேயாவில் (Auraiya) திருமண விழாவிற்கு வந்த இளைஞர் ஒருவர் செய்த காரியம் இப்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. தனது அண்ணன் திருமணத்தில் கெத்து காட்ட வேண்டும் என்பதற்காக, அந்த இளைஞர் iPhone-17 மாடலை EMI மூலம் வாங்கியுள்ளார்.
திருமண மேளதாளங்களுக்கு ஏற்ப கையில் ஐபோனை வைத்துக்கொண்டு அவர் ஆவேசமாக நடனமாடியபோது, எதிர்பாராதவிதமாக கையில் இருந்த போன் அருகில் இருந்த சாக்கடைக்குள் விழுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது விலை உயர்ந்த போனைத் தேடி சாக்கடைக்குள்ளேயே இறங்கிவிட்டார்.
नाले में उतरा दूल्हे का भाई, लेकिन नहीं मिल पाया iPhone-17
भाई की शादी में भौकाल दिखाने के लिए युवक ने EMI पर iPhone-17 खरीदा था. जब वह इसे हाथ में लेकर डांस कर रहा था तभी वह नाले में जा गिरा. iPhone-17 खोजने के लिए युवक नाले में उतर गया लेकिन काफी तलाश करने के बाद भी वह नहीं… pic.twitter.com/9PP9NLm0sx
— NBT Hindi News (@NavbharatTimes) March 27, 2026
வெகுநேரம் சாக்கடையைத் துழாவியும், அந்த இளைஞரால் ஐபோனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. “கஷ்டப்பட்டு EMI கட்டி வாங்கிய போன் இப்படி அநியாயமாக போய்விட்டதே” என அவர் அழுதது பார்ப்பவர்களை வருத்தமடையச் செய்தாலும், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் “EMI ஆசை தோசை” என்ற ரீதியில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் “பந்தா பண்ணப்போய் இப்படி ஆகிடுச்சே” என கமெண்ட் செய்து வருகின்றனர்.
