தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரவி – சுவாதி தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சுவாதி தனது இளைய மகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். மூத்த மகள் 2 வயது மேகனா மட்டும் தந்தை ரவியுடன் வசித்து வந்தார். இது தொடர்பாகக் காவல்துறை விசாரணை மற்றும் குடும்பப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், தனது மகளையும் தன்னிடமிருந்து பிரித்துவிடுவார்களோ என்ற அச்சத்திலும் விரக்தியிலும் ரவி இருந்துள்ளார்.
இந்த மன உளைச்சலால் தனது மகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள ரவி முடிவு செய்தார். தந்தை என்று நம்பி ஆசையாக வந்த குழந்தைக்குச் சப்போட்டா பழத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதனை அறியாத அந்தப் பிஞ்சு குழந்தை பழத்தைச் சாப்பிட்டுப் பரிதாபமாக உயிரிழந்தது.
பின்னர் ரவியும் விஷம் குடித்த நிலையில், அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
