ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் முத்தியார் பாஷா. இவர் தனது கிராமத்தில் உள்ள 14 ஏக்கர் நிலத்தில் மிகப்பிரம்மாண்டமான ராமர் கோவிலைக் கட்டியுள்ளார். மும்பையைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்களைக் கொண்டு, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் வடிவமைப்பிலேயே இந்தத் திருக்கோவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கு ராமர், லட்சுமணர், சீதா மற்றும் ஆஞ்சநேயர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.சிறுவயது முதலே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட முத்தியார் பாஷா, அயோத்திக்குச் சென்று ராமரைத் தரிசிக்க முடியாத பக்தர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கோவிலைக் கட்டியுள்ளார். ராம நவமியை முன்னிட்டு இங்கு 9 நாட்களுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் மருத்துவ முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு ஊர்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாகப் பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.