செங்கல்பட்டு மாவட்டத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் எவ்வித பயமும் இன்றி நடைபெறும் இத்தகைய குற்றங்கள், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்குச் சீர்குலைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது என்றும், மக்கள் இதை வேடிக்கை பார்த்துவிட்டு கடந்து செல்லும் நிலை உருவாகியிருப்பது வேதனைக்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தை வன்முறை கூடாரமாக மாற்றி, மக்களின் பாதுகாப்பை இந்த அரசு கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் குற்றச் செயல்கள் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டதால், அமைதியான தமிழகத்தை உருவாக்க மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
