நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘900 டேஸ் வித்தவுட் அன்னாபெல்’ என்ற ஆவணப்படம், பார்ப்பவர் நெஞ்சை உலுக்கும் ஒரு உண்மைச் சம்பவத்தை விவரிக்கிறது. 22 வயதான அன்னாபெல் என்ற இளம்பெண் உடற்பயிற்சிக்குச் சென்றபோது கடத்தப்படுகிறார்.
அவரைக் கடத்தியவர்கள், அன்னாபெல் உயிருடன் இருப்பதாகக் குடும்பத்தினரை நம்ப வைக்க 14 முறை தொலைபேசியில் மிரட்டியதோடு, அவர் உதவிக்குக் கதறுவது போன்ற ஒரு போலி ஆடியோவையும் அனுப்பி சுமார் 9 லட்சம் டாலர்கள் பணம் கேட்டுள்ளனர். ஆனால், உண்மையில் கடத்தப்பட்ட சில நாட்களிலேயே அன்னாபெல் கொல்லப்பட்டார் என்ற அதிர்ச்சித் தகவல் பின்னரே தெரியவந்தது.
சுமார் 900 நாட்களாக அன்னாபெல்லின் உடல் ஒரு பாழடைந்த தொழிற்சாலையில் கிடந்த நிலையில், அவர் உயிருடன் இருப்பதாகக் கூறி அவரது குடும்பத்தினரிடம் குற்றவாளிகள் தொடர்ந்து பணத்தைப் பறிக்க முயன்றுள்ளனர்.
1995-ல் நடந்த இந்த கோரச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு 2024-ல் வெளியான இந்த ஆவணப்படம், குற்றவாளிகளின் கைது மற்றும் காவல்துறையின் அதிரடி விசாரணையை மூன்று பாகங்களாகக் காட்டுகிறது.
மனதை உறைய வைக்கும் இந்த உண்மைக்கதை தற்போது ஓடிடி தளங்களில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
