சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த 52 வயது பெண் தொழிலாளி சரஸ்வதி, கடந்த மாதம் வேலைக்குச் சென்றவர் மர்மமான முறையில் காணாமல் போனார். இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அவருடன் வேலை பார்த்த மதுரை மாவட்டம் கூடக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் சரவணக்குமாருக்கும், சரஸ்வதிக்கும் இடையே பழக்கம் இருந்தது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் ஒன்றாகக் கட்டிட வேலை பார்த்து வந்தபோது நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு சரஸ்வதி வற்புறுத்தியதால், ஆத்திரமடைந்த சரவணக்குமார் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
சம்பவத்தன்று சரஸ்வதியைத் தனது இருசக்கர வாகனத்தில் உலகாணி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற சரவணக்குமார், அங்கு வைத்துத் திருமணப் பேச்சு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரைத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.
பின்னர் கொலையை மறைப்பதற்காகச் சரஸ்வதியின் உடலில் கல்லைக் கட்டி, அருகில் இருந்த குவாரி பள்ளத்தில் வீசி எறிந்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். செல்போன் சிக்னல் மற்றும் தீவிர விசாரணையின் அடிப்படையில் சரவணக்குமாரைக் கைது செய்த போலீஸார், அவர் அளித்த வாக்குமூலத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.
