சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும், அந்த வகையில் தற்போது இணையவாசிகளை வாயடைக்க வைத்துள்ளது. இந்த வீடியோவில் ஒரு வயதான பாட்டி சாப்பிடும் உணவின் அளவைப் பார்த்து நெட்டிசன்கள் மிரண்டு போயுள்ளனர்.
மேலும் பொதுவாக வயது முதிர்ந்தவர்கள் மிகக் குறைந்த அளவே உணவு உட்கொள்வார்கள் என்ற எண்ணத்தை உடைக்கும் வகையில், அவர் ஒரு பெரிய தட்டில் மலை போல் குவிக்கப்பட்ட உணவை மிக லாவகமாக சாப்பிடுகிறார். இதைப் பார்த்த பலரும், “இவ்வளவு உணவை ஒருவரால் எப்படிச் சாப்பிட முடியும்?” என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
तबीयत खराब है तब आप इतना खा रही हैं, फिर आपके बच्चे क्या खायेंगे? pic.twitter.com/unx82S67pI
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) March 24, 2026
“>
ஒரு தரப்பினர் அந்த பாட்டியின் செரிமான சக்தியையும் ஆரோக்கியத்தையும் பாராட்டி வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் இது உடல்நலத்திற்கு உகந்ததா என்ற விவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர். “வயதான காலத்திலும் இவ்வளவு உற்சாகமாக சாப்பிடுவதைப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ள பயனர்கள், இந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். எது எப்படியோ, அந்த பாட்டியின் “சாப்பாட்டு வீடியோ” தற்போது இணையத்தின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
