உத்தரப் பிரதேச மாநிலத்தில் அபூர்வமான முறையில் ஒட்டிய இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆகாஷ் குமார் என்பவரின் மனைவி நீருவுக்கு, கடந்த 17-ம் தேதி அரசு மருத்துவமனையில் சிசேரியன் மூலம் இந்த குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகளுக்கு இரண்டு தலைகள், இரண்டு கைகள் மற்றும் நான்கு கால்கள் இருந்தாலும், இதயம் மட்டும் ஒன்றாகவே உள்ளது.
தற்போது குழந்தைகள் நலமாக இருப்பதாகவும், தாய்ப்பால் குடிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஒரே இதயம் இருப்பதால் எதிர்காலத்தில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அறிவியல் வளர்ச்சியையும் தாண்டி இயற்கையின் இந்த அரிய நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால், இந்த மகிழ்ச்சிக்கு இடையே ஒரு சோகமும் நிகழ்ந்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தாய் நீருவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அவர் உடனடியாக மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
