அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாகவும் அதிமுக சார்பாகவும் தேர்தல் அறிக்கையை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, தமிழ்நாடு முழுவதும் சென்று அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளைக் கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது
மதசார்பின்மை, ஏழை, எளிய மக்களின் மேம்பாடு, சிறுபான்மையினர் பாதுகாப்பு, தொழில் வளர்ச்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு அறிக்கை தயாரிப்பு என கூறினார்.
இந்த நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் இலவசமாக பிரிட்ஜ் வழங்கப்படும் என்று அதிரடியான ஒரு தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளார். அதன்பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் பாமாயிலின் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
