எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த தேர்தல் அறிக்கையில் மொத்தம் 297 அறிவிப்புகளிடம் பெற்றுள்ளது.
அதன்படி அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 2000 ரூபாய், அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் இலவச பிரிட்ஜ், மீனவர்கள் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு 25 லட்சம் நிவாரணம், அரசு நிலங்களில் நீண்ட காலம் வசித்திருப்பவர்களுக்கு பட்டா, ரேஷன் கடைகளில் ஒரு கிலோ அரிசி மற்றும் ஒரு லிட்டர் பாமாயில் இலவசம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும், அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு இனி பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் காட்சி ஊடகவியலாளர்களுக்கும் வழங்கப்படும் உள்ளிட்டா பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu செய்தியாளர்கள் சந்திப்பு https://t.co/vC2X6j4JP4
— AIADMK – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) March 24, 2026
