மெக்டொனால்டு உணவகத்தில் வேலை தேடிச் சென்ற ஒரு ஏழை இளைஞருக்கு, அங்கிருந்த ஊழியர்கள் ஒரு நிபந்தனை விதித்தனர். வேலையில் சேர வேண்டுமானால் முகத்திலுள்ள தாடியை முழுமையாக எடுத்துவிட்டு (Clean Shave) வருமாறு கூறினர். கையில் போதிய பணம் இல்லாததாலும், முகம் பார்க்கக் கண்ணாடி இல்லாததாலும் அந்த இளைஞர் சாலையோரத்திலேயே நின்று கொண்டு மிகவும் சிரமப்பட்டுத் தாடியைச் சிரைக்க முயன்றார். இதைக் கவனித்த அந்தப் பகுதி போலீஸ் அதிகாரி ஒருவர், உடனடியாக அந்த இளைஞருக்கு உதவ முன்வந்தார்.
A homeless man applied for a job at McDonald's and was told to go shave his beard. Moments later, a policeman spotted him struggling to shave without a mirror and helped him get cleaned up. 🙂🥲 pic.twitter.com/U7HRCJpGCo
— Dera II (@Neutral_OC) March 22, 2026
தன்னைப் பற்றிய கவலையின்றி, அந்த இளைஞர் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அந்தப் போலீஸ் அதிகாரி அவருக்குத் தாடி எடுக்கத் துணையாக நின்றார். கண்ணாடி கூட இல்லாமல் தவித்த அந்த இளைஞருக்குத் தன் கைகளாலேயே முகத்தைச் சுத்தம் செய்து, அவர் அழகாகத் தாடி எடுக்க அந்த அதிகாரி உதவிய நெகிழ்ச்சியான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த மனிதாபிமானச் செயலைப் பாராட்டி, அந்த போலீஸ் அதிகாரியைப் பலரும் ‘நிஜமான ஹீரோ’ என்று கொண்டாடி வருகின்றனர்.
