சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான மற்றும் வேடிக்கையான நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. போட்டியில் பங்கேற்ற ஐந்து வயது சிறுவன் ஒருவன், தொடக்கத்தில் பயத்தில் ஓட முடியாமல் தனது தாயின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அழுதுகொண்டிருக்கிறான். அவனது மனதை நன்றாகப் புரிந்துகொண்ட தாயார், பந்தயம் தொடங்கியதும் அங்கிருந்து ஓடத் தொடங்குகிறார்.

​தாய் தன்னை விட்டுச் செல்வதை உணர்ந்த அந்தச் சிறுவன், அழுகையை நிறுத்திவிட்டுத் தாயின் பின்னாடியே மின்னல் வேகத்தில் ஓடுகிறான். கடைசியில் அம்மாவைத் துரத்திக்கொண்டு ஓடிச் சென்ற அந்தச் சிறுவன், போட்டியில் முதல் பரிசைத் தட்டிச் சென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறான். குழந்தைகளின் இந்த அப்பாவித்தனமான பாசப் போராட்டத்தையும், அந்தத் தாயின் சமயோசித புத்தியையும் பாராட்டி நெட்டிசன்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.