விலங்குகள் மனிதர்களின் உண்மையான நண்பர்கள் என்பதற்குச் சாட்சியாக ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் பந்துடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது, திடீரென அந்தப் பந்து சாலையை நோக்கிச் செல்கிறது.
பந்தை எடுப்பதற்காக அந்தச் சிறுவன் எதையும் யோசிக்காமல் சாலையை நோக்கி ஓடுகிறான். அந்தச் சமயத்தில் சாலையில் வாகனங்கள் வேகமாக வந்து கொண்டிருக்கின்றன.
इस दुनिया में जानवर को हम इंसानों का सबसे वफादार साथी क्यों कहा जाता है यह आपको इस CCTV फुटेज से पता चल सकता है।
बच्चा बॉल से खेल रहा है वह बॉल सड़क की ओर फेंक देता है फिर उसके पीछे जाता है सड़क पर गाड़ियां चल रही हैं, Dogesh भाई बच्चे को रोक लेते हैं।
इस दुनिया में जानवरों से… pic.twitter.com/ipqK2yxC6U
— Shashank Patel (@RccShashank1) March 23, 2026
இதைக் கவனித்த அங்கிருந்த நாய், ஒரு நொடி கூட தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று, அந்தச் சிறுவனைச் சாலையின் நடுவே செல்லவிடாமல் தடுத்து நிறுத்துகிறது.
நாயின் இந்த அபாரமான செயலால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு, அந்தச் சிறுவன் உயிர் தப்பினான். “தெய்வம் எல்லா நேரத்திலும் நேரில் வராது, சில சமயம் இப்படி நாய் உருவத்திலும் வரும்” என இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த நாயைப் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.
