வறுமையை வென்று சாதித்த இளைஞர் ஒருவரின் வெற்றிக்கதை தற்போது இணையதளங்களில் பலருக்கும் உத்வேகம் அளித்து வருகிறது. அபிஷேக் என்ற அந்த இளைஞர், தனது தந்தை தெருத்தெருவாகக் காய்கறி விற்பதைப் பார்த்து வளர்ந்தவர். குடும்பத்தின் கஷ்டத்தைப் போக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் கடுமையாகப் படித்து ‘சிஏ’ (CA) தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
தான் தகுதி பெற்ற உடனேயே, தனது தந்தையிடம் “இனிமேல் நீங்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம், ஓய்வெடுங்கள்” என்று உருக்கமாகக் கூறி காய்கறி விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இது அந்த குடும்பத்தின் தலைவிதியையே மாற்றிய தருணமாக அமைந்தது. இன்று கடின உழைப்பால் உயர்ந்திருக்கும் அபிஷேக், துபாயில் சொந்தமாக வீடு மற்றும் பிஎம்டபிள்யூ (BMW) கார் வாங்கும் அளவிற்குப் பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளார்.
“முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை” என்பதற்கு அபிஷேக்கின் இந்த நிஜ வாழ்க்கைச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.
