பான் கார்டு புதிதாக விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு வருமான வரித்துறை மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பான் கார்டு விண்ணப்பிக்கும் முறையில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.
இதுவரை ஆதார் அட்டையை மட்டுமே வைத்து எளிதாகப் பான் கார்டுக்கு விண்ணப்பித்து வந்த நிலையில், இனி கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே ஆதார் அட்டையை மட்டும் பயன்படுத்தி விண்ணப்பிக்க முடியும்.
ஏப்ரல் 1-க்குப் பிறகு விண்ணப்பிப்பவர்கள் ஆதார் அட்டையுடன் சேர்த்து பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, 10-ஆம் வகுப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் கூடுதலாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே, புதிய பான் கார்டு எடுக்க நினைப்பவர்கள் மார்ச் 31-க்குள் விண்ணப்பித்து இந்த கூடுதல் ஆவணச் சிக்கல்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
