நாகை மாவட்டத்தில் பவிதா மற்றும் அவரது தாய் ஆகிய இருவரையும் பக்கத்து வீட்டுக்காரரான பழனி என்பவரது வளர்ப்பு நாய் ஓடி வந்து கொடூரமாக கடித்தது. தெருவில் நடந்து சென்ற பவிதாவை நாய் விரட்டி கடித்த நிலையில், அவரைக் காப்பாற்ற வந்த அவரது தாயையும் அந்த நாய் விடாமல் துரத்தி கடித்தது. இந்த இக்கட்டான சூழலில், நாயின் உரிமையாளரான பழனியின் குடும்பத்தினர் அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்யாமல், வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்து வேடிக்கை பார்த்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாய் கடியால் காயமடைந்த பவிதாவும் அவரது தாயும் தற்போது வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்த காரணத்தால் தான், நாய் கடித்தபோது பழனியின் குடும்பத்தினர் தடுக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
