மனிதநேயம் என்பது சிலருக்கு வெறும் வார்த்தையாகவே போய்விட்டது என்பதற்குச் சான்றாக, ஓடும் பேருந்தில் நடந்த இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பசியோடு இருந்த ஒரு நபர், பேருந்து ஜன்னல் வழியாக சாலையோர வியாபாரி ஒருவரிடம் உணவிற்காகப் பணம் கொடுத்துள்ளார். ஆனால், அந்த வியாபாரி பணத்தைப் பெற்றுக்கொண்டாரே தவிர, உணவைக் கொடுக்கவில்லை.

பேருந்து நகரத் தொடங்கியதும், ஏமாற்றப்பட்ட அந்த நபர் எதுவும் செய்ய முடியாமல் திகைத்துப் நின்ற நிலையில், அந்த வியாபாரி தான் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டது போல எகத்தாளமாகச் சிரித்துக் கொண்டே நின்றது பார்ப்பவர்களின் ரத்தத்தைக் கொதிக்க வைத்துள்ளது.

​”பணம் போனால் கூடப் பரவாயில்லை, ஆனால் ஒரு மனிதனின் பசியை வைத்து விளையாடும் குணம் இருக்கிறதே, அதுதான் மிகப் பெரிய சாபம்” என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏமாற்றிய அந்த வியாபாரியின் சிரிப்பு, அவரிடம் மனிதாபிமானம் துளியும் இல்லை என்பதையே காட்டுகிறது.

எங்கும் நிறைந்திருக்கும் இது போன்ற வக்கிரம் பிடித்த மனிதர்களால், இன்னும் எத்தனையோ ஏழைகள் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மனிதம் மரணித்துக் கொண்டிருக்கும் இந்த அவலநிலை மாற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.