மும்பை கடற்கரைக்கு வருபவர்களிடம் அவர்களின் மனக்குமுறல்களையும், கவலைகளையும் பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்பதையே ஒரு தொழிலாகச் செய்து வருகிறார் ஒரு நபர்.

இதற்காக அவர் ஒரு சிறிய போர்டை கையில் வைத்துள்ளார், அதில் “உங்களது பிரச்சினைகளை என்னிடம் சொல்லுங்கள், நான் அதைக் கேட்கிறேன்; அதற்கு நீங்கள் எனக்கு 10 ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய பரபரப்பான உலகில் நம்முடைய குறைகளைக் கேட்கக் கூட ஆள் இல்லாத நிலையில், இந்த நபரின் வித்தியாசமான முயற்சி பலரையும் கவர்ந்துள்ளது.

மன அழுத்தத்தில் இருப்பவர்கள் மற்றும் யாரிடமாவது எதையாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் இவரிடம் தங்களது கதைகளைச் சொல்லி மனபாரத்தைக் குறைத்துக் கொள்கின்றனர்.

சமூக வலைதளங்களில் இவரது இந்தப் புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், “இது ஒரு நல்ல மனிதநேய முயற்சி” எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.