சேலம் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி திவ்யபாரதி (31). செந்தில் திருப்பூரில் வேலை பார்த்து வருவதால், திவ்யபாரதி தனது இரண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, சமையலறையில் இருந்த பாட்டிலில் வீட்டை சுத்தம் செய்யும் திராவகம் இருந்துள்ளது. அதனை கவனிக்காத திவ்யபாரதி, தவறுதலாக அது பழச்சாறு என்று நினைத்துக் குடித்துவிட்டார்.

இதனால் அவருக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் எரிச்சல் ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், பலனின்றி திவ்யபாரதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கவனக்குறைவால் நடந்த இந்த உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.