ஈரான் வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. போர் தொடங்கிய கடந்த பத்தொன்பது நாட்களில் மட்டும் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 60 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
குறிப்பாகச் சவுதி அரேபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான அரம்கோவின் ஆலை மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் நேரடி விளைவாக நேற்று ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை சுமார் 10707 ரூபாய் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.
போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 1717 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐரோப்பா மற்றும் சீனா உள்ளிட்ட முக்கிய சர்வதேச சந்தைகளிலும் கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதால் இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி உயர்வு வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். வளைகுடா நாடுகளில் நிலவும் இந்தப் போர்ச் சூழல் உலகப் பொருளாதாரத்திற்கே சவாலாக மாறியுள்ளது.
