சர்வதேச அளவில் போர் பதற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே, ஈரான் நாட்டு மக்களுக்கு இந்தியா செய்த மனிதாபிமான உதவி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஈரானில் நிலவும் தட்டுப்பாட்டைக் குறைக்க, இந்தியாவிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள் அந்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த உதவியைப் பெற்றுக்கொண்ட ஈரான் தூதரகம், தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இந்தியாவிற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, “நீங்கள் மிகவும் கருணையுள்ளவர்கள் (Kind)” என்று இந்தியாவைப் புகழ்ந்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளது. அரிசி, பருப்பு மற்றும் சில மருத்துவப் பொருட்கள் அடங்கிய அந்த உதவிப் பாக்கெட்டுகள் ஈரான் மக்களின் இக்கட்டான நேரத்தில் பெரும் உதவியாக அமைந்ததைக் குறிப்பிட்ட அந்த நாடு, இந்தியாவின் இந்த மனிதாபிமானச் செயலை ஒரு ‘உண்மையான நண்பனின் அடையாளம்’ என்று கொண்டாடியுள்ளது.
உலக நாடுகளுக்கு இடையே பல்வேறு அரசியல் மோதல்கள் இருந்தாலும், ஈரான் மக்களின் பசி போக்க இந்தியா நீட்டிய இந்த உதவிக்கரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
