ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்கு (Mossad) உளவு பார்த்த அகில் கேஷாவர்ஜ் என்ற 27 வயது வாலிபரை ஈரான் அரசு இன்று தூக்கிலிட்டுள்ளது.

கட்டிடக்கலை மாணவரான இவர், ஈரானின் ராணுவத் தலைமையகங்களைப் புகைப்படம் எடுத்தபோது கச்சிதமாகப் பிடிபட்டார். விசாரணையில், இவர் மொசாட் ஏஜெண்டுகளுக்காக சுமார் 200-க்கும் மேற்பட்ட ரகசியப் பணிகளைச் செய்து கொடுத்ததும், அதற்குப் பிரதிபலனாகக் கிரிப்டோகரன்சி (Cryptocurrency) மூலம் பணம் பெற்றதும் அம்பலமானது.

இஸ்ரேல் நடத்திய துல்லியமான தாக்குதல்களுக்கு ஈரானுக்குள் இருந்த இவரைப் போன்ற சில ‘வீட்டு எலிகள்’ தான் முக்கியத் தகவல்களைக் கசியவிட்டுள்ளனர் என்று ஈரான் அதிகாரிகள் கருதுகின்றனர்.

சமீபகாலமாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு உளவு பார்க்கும் நபர்களைக் கண்டறிய 600-க்கும் மேற்பட்டோரை ஈரான் கைது செய்துள்ளதுடன், புதிய சட்டத்தின் மூலம் அவர்களுக்கு நேரடியாக மரண தண்டனை மற்றும் சொத்து பறிமுதல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.