தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை ஜியாங் பிங் தனது திருமண வாழ்க்கை முறிந்ததற்கான அதிர்ச்சியூட்டும் காரணங்களை அண்மையில் ஒரு செய்தித் திட்டத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். தனது 21வது வயதில் தன்னை விட 12 வயது மூத்தவரைத் திருமணம் செய்து கொண்ட இவர் 7 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார்.
அதன் பிறகு தனது கணவர் தன்னிடம் பேசுவதைத் தவிர்ப்பதையும் கடுமையான சொற்களால் காயப்படுத்துவதையும் ஜியாங் பிங் கவனித்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது கணவரிடம் இது குறித்துக் கேட்டபோது அவர் கூறிய மர்மமான பதில் நடிகைக்குப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சந்தேகத்தின் அடிப்படையில் தனது தாயார் வீட்டிற்குச் சென்ற நடிகை ஜியாங் பிங் அங்கு நடந்த உண்மையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தனது கணவர் தனது சொந்தத் தாயாருடனேயே தகாத உறவில் இருந்ததை அறிந்த அவர் உடனடியாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
தனது தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது அவருக்கு மசாஜ் செய்து விடுவதாகக் கூறி நெருக்கமான தனது கணவர் இறுதியில் தாயாருடனேயே தவறான உறவை ஏற்படுத்திக் கொண்டதாக நடிகை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் காரணமாகத் தனது தாயாருடனான உறவைத் துண்டித்துக் கொண்ட நடிகை ஜியாங் பிங் தற்போது இந்த விவகாரத்தை மீண்டும் பொதுவெளியில் பகிர்ந்துள்ளது இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
