தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் பணிகளை முறைப்படுத்த இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய டிஜிட்டல் நடைமுறைகளைக் கொண்டு வந்துள்ளது.

இது குறித்துச் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசியல் கட்சிகள் தங்களது பேரணி அல்லது பிரச்சாரங்களை நடத்த விரும்பினால், இனி ‘சுவிதா’ (SUVIDHA) செயலியில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதில் பிரச்சாரம் நடைபெறும் இடம், தேதி மற்றும் நேரம் போன்ற விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்து அனுமதி பெற வேண்டியது அவசியம்.

அதேபோல், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் அல்லது பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம் போன்ற புகார்களைப் பொதுமக்கள் நேரடியாக ‘சி-விஜில்’ (cVIGIL) செயலி மூலம் புகைப்படமாகவோ அல்லது வீடியோவாகவோ பதிவேற்றிப் புகார் அளிக்கலாம் என அதிரடியாகக் கூறியுள்ளார்.