தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணிக் கணக்குகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகப் பேச்சுக்கள் அடிபடும் நிலையில், அது குறித்துப் பேசிய ஜெயக்குமார், அதிமுகவின் தலைமையையும், எடப்பாடி பழனிசாமியின் தலைமையையும் விஜய் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவருக்குப் பலம் சேரும் என்று தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லாமல் தனித்து நின்றாலோ அல்லது அதிமுக தலைமையைக் ஏற்க மறுத்தாலோ விஜய் அரசியலில் பெரிய வெற்றியைப் பெற முடியாது என்றும், அவர் ஒரு ‘லூசர்’ (Loser) ஆகத்தான் இருப்பார் என்றும் மிகக் காரசாரமாகக் கூறியுள்ளார்.
ஏற்கனவே விஜய் தனது கொள்கைகளைப் பிரகடனப்படுத்தி வரும் நிலையில், அதிமுகவின் இந்த நேரடி மிரட்டல் போன்ற கருத்து தவெக தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
