“சிறந்த பண்பாளரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பொதுவெளியில் தவறாகப் பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது!” – தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிராக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடியாகக் களமிறங்கியுள்ளார். ரஜினிகாந்த் பற்றி ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், இது போன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவது அரசியல் நாகரிகம் அல்ல எனச் சாடியுள்ளார்.

​மேலும், “ரஜினியைத் தவறாகப் பேசுவதை கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்; இதற்கு ஆதவ் அர்ஜுனா கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தவெக மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே ஏற்கனவே மோதல் வெடித்துள்ள நிலையில், பாஜக-வும் ரஜினிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது!