பெங்களூருவில் உள்ள உணவகம் ஒன்றில் லெமன் ஜூஸ் வாங்கிய வாடிக்கையாளருக்கு, சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கென (Gas Crisis Charge) தனியாக 17 ரூபாய் பில் போடப்பட்டது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“குடிச்சது ஜூஸ்.. அதுக்கு எதுக்குடா கேஸ்?” என நெட்டிசன்கள் இணையதளங்களில் இந்த பில்லை வைத்து கலாய்த்து வருகின்றனர். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அந்த உணவக நிர்வாகம், கேஸ் பயன்பாடு இல்லாத உணவுகளுக்கும் இந்தத் தொகை சேர்க்கப்பட்டிருந்தாலும், இன்னொரு பக்கம் ‘தள்ளுபடி’ என்ற பெயரில் அதே தொகையைக் கழித்து விடுவதாகத் தெரிவித்துள்ளது.