இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டுவிட்டதாக உலகமெங்கும் காட்டுத்தீயாய் வதந்திகள் பரவிய நிலையில், அதற்கு இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாக மறுப்புத் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த மறுப்பு வெளியான சில மணிநேரங்களிலேயே ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), நெதன்யாகுவுக்கு எதிராக ஒரு பகீர் சபதத்தை மேற்கொண்டுள்ளது. “இந்தக் குழந்தைகளைக் கொல்லும் குற்றவாளி ஒருவேளை உயிரோடு இருந்தால், அவனை நாங்கள் முழு பலத்துடன் தேடித் துரத்திக் கொல்லுவோம்” என IRGC அதிரடியாகத் தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த நேரடி மிரட்டல் மத்திய கிழக்கில் போர்ப் பதற்றத்தை உச்சகட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
முன்னதாக, நெதன்யாகுவின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதில் அவரது ஒரு கையில் ஆறு விரல்கள் இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. “இது உண்மையான நெதன்யாகு அல்ல, அவர் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார், இது அவரைப் போன்ற வேறொரு நபர் (Body Double)” எனப் பலரும் பதிவிட, அவரது மரணச் செய்திகள் தீயாய் பரவின. இந்த வதந்திகளை இஸ்ரேல் மறுத்தாலும், ஈரான் ராணுவம் தனது பிடியைத் தளர்த்தத் தயாராக இல்லை. நெதன்யாகுவை வேட்டையாடுவதே தங்களின் இலக்கு என ஈரான் வெளிப்படையாக அறிவித்திருப்பது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
