சர்வதேச அளவில் பெரும் செல்வாக்கு படைத்தவராகவும், பல முக்கிய ஆளுமைகளுடன் தொடர்பில் இருந்தவராகவும் அறியப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ம் ஆண்டு சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ (Epstein Files) என்ற பெயரில் பல ரகசிய ஆவணங்கள் வெளியாகி உலகையே உலுக்கிய நிலையில், தற்போது ஒரு புதிய வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில், ஜெஃப்ரி எப்ஸ்டீன் போலவே அச்சு அசலாக இருக்கும் ஒரு நபர், கண்ணாடியணிந்து கொண்டு ஹாயாக கார் ஓட்டிச் செல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “அப்படியானால் சிறையில் இறந்தது யார்? எப்ஸ்டீன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறாரா?” எனப் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 2026-ன் தொடக்கத்தில் எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட கோப்புகள் வெளியான நிலையில், இந்த வீடியோ விவாதத்தை இன்னும் சூடாக்கியுள்ளது. இருப்பினும், அந்த வீடியோவில் இருப்பவர் எப்ஸ்டீன் தானா அல்லது அவரைப் போலவே இருக்கும் வேறொரு நபரா (Doppelganger) என்பது குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. எப்ஸ்டீனின் மரணம் குறித்த மர்மங்கள் இன்னும் விலகாத நிலையில், இந்த வீடியோ புதிய சதிக்கோட்பாடுகளுக்கு (Conspiracy Theories) உயிர் கொடுத்துள்ளது.
