திமுகவின் மிகச்சிறந்த பேச்சாளர், மாணவர் அணி செயலாளர் என வலம் வந்த ராஜீவ் காந்தியின் பதவி மாற்றம் தற்போது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியிலிருந்து வந்து குறுகிய காலத்திலேயே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக மாறிய ராஜீவ் காந்தி, திடீரென அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு கொள்கை பரப்பு இணைச் செயலாளராக ‘டம்மி’ ஆக்கப்பட்டுள்ளார். இதற்கு பின்னால் வெறும் நிர்வாகக் காரணங்கள் மட்டுமில்லை, அதையும் தாண்டிய சில ‘பகீர்’ பின்னணிகள் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

​குறிப்பாக, பிரான்சில் வசிக்கும் ஒரு நபரின் மனைவிக்கு ராஜீவ் காந்தி இன்ஸ்டாகிராம் மூலம் தேவையற்ற செய்திகளை அனுப்பியதாகவும், அந்தப் பெண் இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இது ஒருபுறமிருக்க, கோயம்புத்தூரில் போட்டியிட திட்டமிட்ட ராஜீவ் காந்தி, அங்குள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் மோதல் போக்கை கடைபிடித்ததும், டெண்டர் விவகாரங்களில் தலையிட்டதும் தலைமைக்கு புகாராகச் சென்றுள்ளது. இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்து பெரிய போராட்டமாக மாற்றத் திட்டமிட்டதை அறிந்த திமுக தலைமை, முந்திக்கொண்டு ராஜீவ் காந்தியின் பதவியைப் பறித்துள்ளது. “கட்சிக்கு கெட்ட பெயர் வரக்கூடாது, இப்போதைக்கு அமைதியாக இரு” என அவருக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.