பீகார் மாநிலம் பெகுசராய் பகுதிக்கு முதலமைச்சர் நிதீஷ் குமார் ஒரு நிகழ்ச்சிக்காக வரவிருந்தார். இதற்காகத் தயார் செய்யப்பட்ட ஹெலிபேடில் போலீஸ் பாதுகாப்பு பலமாகப் போடப்பட்டிருந்தது. ஆனால், முதலமைச்சர் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, திடீரென ஒரு காளை மாடு பாதுகாப்பு வளையத்தை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது.

​திடீரென வந்த காளையைப் பார்த்துப் பதறிப்போன போலீஸார், அதை விரட்ட முயன்றனர். ஆனால், அந்தக் காளை போலீஸாரையே திருப்பி விரட்ட ஆரம்பித்தது! லத்தியுடன் நின்ற போலீஸ்காரர்கள் பயந்து ஓடும் வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. ஒருவழியாகக் கடும் போராட்டத்திற்குப் பிறகு காளையை அப்புறப்படுத்திய பின்பே அதிகாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். “பாதுகாப்பு கெடுபிடிகளை எல்லாம் மீறி காளை மாடு செம ‘விஐபி’ என்ட்ரி கொடுத்துடுச்சு!” என மக்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.