கோடை காலத்தில் வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஏர் கூலர்களில் பாம்புகள் தஞ்சம் புகுவது போன்ற செய்திகள் அடிக்கடி வெளிவருவதுண்டு. அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது.

மேலும் ஒரு ஏர் கூலரின் மூடியைத் திறந்தபோது, அதற்குள் ஒரு பெரிய நாகப்பாம்பு சுருண்டு அமர்ந்திருந்த அதிர்ச்சியூட்டும் காட்சி இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. கற்பனை கூட செய்து பார்க்க முடியாத இந்த பயங்கரமான காட்சியைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் மிரண்டு போயுள்ளனர்.

“>

இந்த வைரல் வீடியோவைப் பார்த்த சமூக வலைத்தளப் பயனர்கள் கருத்துப் பிரிவில் தங்களது அச்சத்தையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். “இனி எங்கள் வீட்டு கூலரை ஆன் செய்வதற்கு முன்பு கண்டிப்பாக ஒருமுறை சோதித்துப் பார்ப்போம்” என்று சிலர் பதிவிட்டுள்ளனர்.

மேலும் சிலர் நகைச்சுவையாக, “இந்த கூலரின் புதிய முதலாளி இந்த பாம்புதான்” என்றும், “ஏசியை விட மலிவான கூலிங் சிஸ்டம்” என்றும் கமெண்ட் செய்துள்ளனர். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் நாமாக எதையும் செய்யாமல், உடனடியாக பாம்பு மீட்புக் குழுவினரை அழைப்பதே புத்திசாலித்தனம் என்று பலரும் தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.