அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமியின் வின்வுட் பகுதியில், ஆடம்பர ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் சுமார் 60,000 டாலர் மதிப்பிலான டிசைனர் ஆடைகளைத் திருடியதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 22 வயதான பட்டேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இவர் பல மாதங்களாக அதே கடைக்குச் சென்று, சில பொருட்களை முறையாக வாங்குவது போல் நடித்து, மற்ற பொருட்களைத் தனது பையில் மறைத்து திருடி வந்தது சிசிடிவி காட்சிகளின் மூலம் அம்பலமானது. கடை உரிமையாளர் லூயிஸ் நெக்ரிச் கூறுகையில், பட்டேல் சில பொருட்களை உண்மையாக வாங்கியதால் ஆரம்பத்தில் திருட்டு நடந்ததைக் கண்டறிவது கடினமாக இருந்தது என்றார்.

“>

இந்நிலையில் இறுதியில், கடந்த சனிக்கிழமை மீண்டும் கடைக்கு வந்தபோது காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட பட்டேல் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது, மேலும் தற்போது அவர் 5,000 டாலர் பிணைத் தொகையைச் செலுத்தி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.