உத்தரகண்ட் மாநிலம் டெஹ்ராடூனில் பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு இளைஞர்கள் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். பின்னால் அமர்ந்திருந்த வாலிபர், அந்தப் பயணத்தை ஜாலியாகத் தனது மொபைலில் ‘ரீல்ஸ்’ எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், சாலையோரப் புதருக்குள் இருந்து ஒரு சிறுத்தை (Leopard) மின்னல் வேகத்தில் பைக் மீது பாய்ந்தது.

​நல்லவேளையாக பைக் அதிக வேகத்தில் சென்றுகொண்டிருந்ததால், சிறுத்தையின் பிடியில் இருந்து இளைஞர்கள் நூலிழையில் உயிர் தப்பினர். ஒரு நொடி தாமதித்திருந்தாலும் அந்த இளைஞர்களின் நிலைமை மோசமாகியிருக்கும். இந்த மொத்த பயங்கரமும் அந்த இளைஞரின் கேமராவிலேயே பதிவாகியுள்ளது. “ரீல்ஸ் எடுக்கப் போய், ரியலா எமனைப் பார்த்துட்டோம்!” என அந்த இளைஞர்கள் இப்போதும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இந்த வீடியோ இப்போது இணையதளங்களில் வைரலாகி வருவதுடன், காட்டுப்பகுதி சாலைகளில் செல்பவர்களுக்குப் பெரும் எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.