திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட என்.டி.ஏ (NDA) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்காசியாவில் நடைபெற்று வரும் போர் சூழல் குறித்து முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார்.
இந்தப் போரினால் எரிவாயு விநியோகச் சங்கிலியில் (Supply Chain) பாதிப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான் என்றாலும், இதைப் பற்றிப் பரப்பப்படும் தேவையற்ற வதந்திகளை நம்பி மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
போர்ச் சூழல் எப்படி மாறினாலும், இந்தியர்களின் நலன் மற்றும் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும், எதற்கும் அஞ்சத் தேவையில்லை என்றும் மோடி உருக்கமாகத் தெரிவித்தார்.
எரிவாயு தட்டுப்பாடு குறித்துப் பரவும் தகவல்களால் மக்கள் கவலையில் இருந்த நிலையில், பிரதமரின் இந்த நேரடி அறிவிப்பு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
