திருச்சியில் நடைபெற்ற NDA பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக மூத்த தலைவர் திண்டுக்கல் சீனிவாசன், தனது வழக்கமான பாணியில் நிருபர்களைக் கலாய்த்துத் தள்ளியுள்ளார். காரை விட்டு இறங்கிய அவரிடம், பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து நிருபர்கள் மைக் நீட்டி கேள்வி எழுப்பினர். அதற்கு, “இப்பதான்யா வர்றேன்.. அப்புறம் பேசிக்கலாம்” என்று நழுவப் பார்த்தார். ஆனால் விடாத நிருபர்கள் விடாக்கண்டனாகப் பின் தொடரவே, ஒரு கட்டத்தில் சீனிவாசன் சொன்ன பதில் அங்கிருந்தவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.
"எப்பா என்னைய மாட்டிவிட்டு கட்சியிலிருந்து நீக்க வெச்சிடாதீங்க.." விஜய் பற்றிய கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் கொடுத்த கலகலப்பு பதில்.!#Trichy | #ADMK | #DindigulSrinivasan | #Vijay | #Politics | #PolimerNews pic.twitter.com/pvyBikP6TK
— Polimer News (@polimernews) March 11, 2026
”ஏய் இருய்யா.. இப்படியே ஏதாவது கேக்க வச்சு, என்னை எதையாவது பேசவிட்டு, கடைசியில கட்சியை விட்டு நீக்க வச்சிருவீங்க போல!” என்று அவர் தனது டிரேட்மார்க் சிரிப்புடன் எதார்த்தமாகப் பதிலளித்தார். சீரியஸான அரசியல் சூழலிலும், திண்டுக்கல் சீனிவாசனின் இந்தத் தக் லைஃப் (Thug Life) பதிலால் அந்த இடமே கலகலப்பானது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ தற்போது ‘ட்ரெண்டிங்’ ஆகி வருகிறது.
