கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தல் சமயத்தில், “காங்கிரஸ் தோற்று பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை வெறும் 35 ரூபாய்க்கும், சிலிண்டர் விலை 200 ரூபாய்க்கும் கிடைக்கும்” எனப் மேடைக்கு மேடை முழங்கியவர் யோகா குரு பாபா ராம்தேவ். அன்றைய சூழலில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ‘பகீர்’ கணிப்பு, இன்று 2026-ல் ஒரு நகைச்சுவையாகவே மாறிப்போயுள்ளது. தற்போது பெட்ரோல் 105 ரூபாயையும், சிலிண்டர் 1100 ரூபாயையும் தாண்டி விண்ணைத் முட்டும் அளவிற்கு விலையேறி நிற்பது நடுத்தர மக்களைப் பெரும் இன்னலுக்கு உள்ளாக்கியுள்ளது.

​சமூக வலைதளங்களில் இப்போது பாபா ராம்தேவின் அந்த பழைய வீடியோக்களைத் தோண்டி எடுத்து நெட்டிசன்கள் ரகளையான கமெண்ட்டுகளைத் தட்டி வருகின்றனர். “அன்னைக்கு அவ்வளவு தைரியமா சொன்னீங்களே, இப்போ அந்த பெட்ரோல் பங்க் எங்க இருக்குன்னு சொல்லுங்க?” எனப் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். ஒருபுறம் உலகளாவிய போர் பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணம் என்று சொல்லப்பட்டாலும், அன்று கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும் இன்றைய எதார்த்தத்திற்கும் உள்ள மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி தான் இப்போது இணையத்தின் ‘ஹாட் டாப்’பிக்!